இலங்கை நூலகர் சேவை தரம் IIIக்கு ஆட்சேர்ப்பதற்கான போட்டிப்பரீட்சை (Open/Limited) - Ministry of Public Administration - Today First

Application

PHI Selected Name List

Breaking

Thursday, July 23, 2020

இலங்கை நூலகர் சேவை தரம் IIIக்கு ஆட்சேர்ப்பதற்கான போட்டிப்பரீட்சை (Open/Limited) - Ministry of Public Administration



Open/ Limited  Competitive Examination for Recruitment to Grade III of Sri Lanka Government Librarian Service - 2019 (2020) 

இலங்கை நூலகர் சேவை தரம் 111க்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான விண்ணப்பம் திறந்த / மட்டுப்படுத்தப்பட்ட அடிப்படையில் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் கோரப்பட்டுள்ளது. 

இது தொடர்பான வர்த்தமானி இன்று (24/07/2020) வெளியிடப்பட்டுள்ளது.

வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள திறந்த போட்டிப்பரீட்சைக்கான ஒரு சில விடயங்கள் சுருக்கமாக கீழே தரப்படுகின்றன.

இப்போட்டிப்பரீட்சை இலப்பரீட்சைகள் ஆணையாளரினால் எதிர்வரும் 2020 நவம்பர் மாதமளவில் கொழும்பில் நடாத்தப்படவுள்ளது.

சம்பள அளவுத்திட்டம்- MN -3-2016
Rs. 31040 - 10 X 445 - 11 X 660 - 10 X 730 - 10 X 750 - Rs 57550. 

இப்பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான தகைமைகள்.

1. இலங்கை பிரஜையாக இருத்தல்
2. சிறந்த நல்லொழுக்கம் உடையவராக இருத்தல்,
3. விண்ணப்ப முடிவுத்திகதியில் 18 - 30 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல்,

கல்வித்தகைமைகள்.

1. கல்விப்பொது தராதர சாதாரண தரப்பரீட்சையில் சிங்களம்/ தமிழ் //ஆங்கிலம் மற்றும் கணிதத்தில் திறமைச்சித்தியுடன் ஒரே தடவையில் 06 பாடங்களில் சித்தியடைந்திருத்தல்,

மற்றும்
2. கல்விப்பொது தராதர உயர்தரப்பரீட்சையில் அனைத்து பாடங்களிலும் ஒரேதடைவையில் சித்தியடைந்திருத்தல் ( பொதுப்பரீட்சை மற்றும் பொது ஆங்கிலம் தவிர)

மேலும் தொழிற்தகைமைகளும் வர்த்தமானியில் கோரப்பட்டுள்ளன. 

விண்ணப்ப முடிவுத்திகதி - 2020.08.24

விபரம் மற்றும் விண்ணப்பம் அடங்கிய வர்த்தமானி -

No comments:

Post a Comment

Pages