அரச ஊழியர்களின் சம்பளத் திருத்தம் - 2016 - Today First

Application

PHI Selected Name List

Breaking

Monday, June 22, 2020

அரச ஊழியர்களின் சம்பளத் திருத்தம் - 2016



கடந்த 2016ம் வருடம் வெளியிடப்பட்ட அரச ஊழியர்களின் சம்பளத் திருத்தம் தொடர்பாக பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் இன்று கடிதம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அரச ஊழியர்களின் சம்பளத்தின் நூற்றுவீதமாக செலுத்தப்படும் படி தொடர்பாக அரச நிர்வாக முகாமைத்துவ மற்றும் சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சினால் வெளியிடப்பட்ட 03/2016(III) இலக்க அரசாங்க நிருவாக சுற்றறிக்கையின்படி தாபன விதிக்கோவையின் VIIம் அத்தியாயத்தின் 12:6:1ம் பிரிவில் குறிப்பிடப்பட்டதற்கிணங்க வழங்கப்படும் கொடுப்பனவினை வழங்குதல் தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அரசாங்க நிருவாக சுற்றறிக்கை 03/2016(III)இல் குறிப்பிடப்பட்ட விடயம் பின்வருமாறு.

2016.02.25ம் திகதி வெளியிடப்பட்ட அரசங்க நிருவாக சுற்றறிக்கை 03/2016இன் 06ம் பந்தியின் 6.1ஆம் பிரிவு கீழ்வருமாறு திருத்தப்படல் வேண்டும். என 2018.05.30ம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக்கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டது.

06. சம்பளத்தின் நூற்றுவீதமாக செலுத்தும்படி

"6.1 ஏதாவதொரு நிறுவனத்தில் அல்லது சேவையொன்றின் / பதவியொன்றின் அல்லது உத்தியோகத்தர்களின் பொருட்டு சம்பளத்தின் நூற்று வீதமாக அல்லது/ மற்றும் சம்பளத்தின் அடிப்படையில் கணக்கிடப்பட்டு செலுத்தப்படும் சகல படிகளும் 2018.06.01ஆந் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் வகையில் தற்போதைய சம்பளத்தின் நிதி ரீதியான பெறுமதியினை அடிப்படையாக கொண்டு கணிப்பீடு செய்தல் வேண்டும்."

இது தொடர்பாக தாபன விதிகோவை VIIம் அத்தியாயத்தின் 12.6.1ம் பிரிவில் குறிப்பிடப்பட்ட விடயம்:-


பதில் கடமைபுரியும் உத்தியோகத்தர் இதன் 12.5.4 என்ற உட்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள வகுதிகளில் அடங்குவாராயின் செலுத்த வேண்டிய மொத்த தொகையானது, பதில்கடமை பதவியின் ஆரம்பச்சம்பளத்தில் 25% ஐத் தாண்டக்கூடாது.

12:5:4 உட்பிரிவு


உத்தியோகத்தர் ஒருவர் நிரந்தர பதவியொன்றை வகிக்கும் அதேநேரம் மற்றுமொரு பதவியில் பதில் கடமை புரிவாராயின் அவருக்கு பின்வருமாறு கொடுப்பனவு செலுத்துதல் வேண்டும். 

குறித்த இரண்டு பதவிகளிலும் அவர் கடமையாற்ற வேண்டி விதிக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் அவருக்கு பதில் கடமை புரியும் பதவியின் ஆரம்ப சம்பளத்தின் 25% உடன் அவரது நிரந்தர பதவிக்குரிய முழுச்சம்பளத்தையும் பெற்றுக்கொடுத்தல் வேண்டும். 

குறித்த பதவிக்கு சம்பளம் ஒன்று நிர்ணயிக்கப்பட்டிராத சந்தர்ப்பங்களில் 25% இற்கு சமமான சம்பளமானது கற்பனை சம்பளமொன்றாக அமைதல் வேண்டுமென்பதோடு, அது தீர்மானிக்கப்பட வேண்டியது அதற்கான கோரிக்கையொன்று மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் திறைசேரி செயலாளரை உசாவி பொது நிருவாக விடயத்துக்கு பொறுப்பான அமைச்சின் செயலாளரினாலாகும். (R.Ramesh MSO I)

No comments:

Post a Comment

Pages