இவ்வருடம் எதிர்பார்க்கக்கூடிய வேலைவாய்ப்பு போட்டிப்பரீட்சைகள் - Today First

Application

PHI Selected Name List

Breaking

Friday, June 19, 2020

இவ்வருடம் எதிர்பார்க்கக்கூடிய வேலைவாய்ப்பு போட்டிப்பரீட்சைகள்



இவ்வருடம் 2020 ஜனவரி மாதம் தொடக்கம் விண்ணப்பம் கோரப்பட்டுள்ள ஆட்சேர்ப்பு போட்டிப்பரீட்சைகளில் இவ்வருடம் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற பரீட்சை விபரங்கள் குறித்த போட்டிப்பரீட்சைகளுக்கு தயார் செய்பவர்களுக்கு மீள நினைவு படுத்தும் நோக்குடன் கீழே தரப்பட்டுள்ளன.

பதிவாளர் நாயக திணைக்களத்தின் பதிவாளர் சேவையின்IIIஆம் வகுப்பின் IIஆம் தரத்திற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப்பரீட்சை -2020
(Registrar General Department - Open Competitive Examination for Class III Grade II of the Registrar Service - 2020)

இப்பதவிக்கு ஆட்களைச் சேர்த்துகொள்வதற்கான விண்ணப்பங்கள் கடந்த 2020 ஜனவரி 24ம் திகதிய அரசாங்க வர்த்தமானியில் கோரப்பட்டது. 

இப்பரீட்சை கொழும்பு, கண்டி, காலி, யாழ்ப்பாணம், அம்பாறை, அநுராதபுரம், பதுளை, இரத்தினபுரி, குருநாகல், ஆகிய நகரங்களில் நடைபெறவுள்ளதுடன் 2020 மே மாதம் இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தினால் நடாத்தப்படும் எனவும் வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

இப்போட்டிப்பரீட்சைக்காக நடாத்தப்படும் பாடங்களில் 40% அல்லது அதற்கு மேற்பட்ட புள்ளிகளை பெற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு பெற்றுக்கொள்ளும் புள்ளிகளின் கூட்டுத்தொகைக்கு ஏற்ப மேலதிக புள்ளிகளைப் பெற்றவர்கள் ஒழுங்கு முறையில் சாதாரண நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கப்படவுள்ளனர். சான்றிதழ்களை பரிசீலனை செய்வதற்காக மட்டுமே சாதாரண நேர்முகப்பரீட்சை நடைபெறவுள்ளது.

இப்போட்டிப்பரீட்சைக்கான பாடங்களும் அது தொடர்பான விபரங்களும்

 விடயம் விடய
இலக்கம்
 கால அளவு அதிகூடிய
புள்ளிகள்
சித்திக்கான
புள்ளிகள் 
 நுண்ணறிவு 01 01 மணித்தியாலம் 100 40
 பொது அறிவு 02 01 மணித்தியாலம் 100 40
 மொழி இயலுமை 03 01 மணித்தியாலம் 100 40

இப்பரீட்சை இவ்வருடம் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

உள்நாட்டு வர்த்தக, உணவு பாதுகாப்பு மற்றும் பாவனையளர் நலன்புரி அமைச்சின் கீழான அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களத்தின் உத்தியோகத்தர் சேவை தரம் III இல் அளவியல் விஞ்ஞான ஆய்வு உத்தியோகத்தர் (திணைக்களம் சார்) பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப்பரீட்சை - 2020
(Open Competitive Examination for the Recruitment to the Posts of Grade II Metro logy Experimental Officers (Departmental) of Department of Measurement Units Standards and Service -2020 

இப்பதவிக்கான போட்டிப்பரீட்சை விண்ணப்பங்கள் கடந்த 2020 ஜனவரி 31ம் திகதிய அரசாங்க வர்த்தமானியில் கோரப்பட்டதுடன் இப்பரீட்சை பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் 2020 மே மாதம் கொழும்பில் மாத்திரம் நடாத்தப்படும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இப்பரீட்சை இரண்டு வினாத்தாள்களைக் கொண்டது.

01. நுண்ணறிவு - மொத்தம் 100 புள்ளிகள் 01 மணித்தியாலம்
இவ்வினாப்பத்திரம் பல்தேர்வு வினாக்கள் மற்றும் சுருக்கமாக விடையளிக்கும் முறையிலான 50 மாதிரி வினாக்களைக் கொண்டது. எல்லா வினாக்களுக்கும் விடையளிக்க வேண்டும்.

02. பொது அறிவு - மொத்தம் 100 புள்ளிகள், 01 மணித்தியாலம்.
பௌதீக விஞ்ஞானத்தை அடிப்படையாக கொண்ட பொது அறிவு, இலங்கை அரசியல், சமூகவியல், கலாச்சாரம், மற்றும் பொருளாதார முக்கியத்துவம் தொடர்பிலான பல்தேர்வு வினாக்கள் மற்றும் சுருக்கமாக விடையளிக்கும் 50 மாதிரி வினாக்களைக் கொண்டது. எல்லா வினாக்களுக்கும் விடையளிக்க வேண்டும்.

கட்டமைப்பு ரீதியான நேர்முகப்பரீட்சை - அதிகூடிய புள்ளிகள் 25

கணினி அறிவு, ஆங்கில மொழித்தேர்ச்சி, நேர்முகப்பரீட்சையில் காண்பிக்கப்படும் தகைமைகள் ஆகியவற்றுக்காக அதிகூடிய புள்ளிகள் 25.
 
இப்பரீட்சையும் இவ்வருடம் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவையின் IIIஆம் தரத்திற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப்பரீட்சை.
(Limited Competitive Examination for Recruitment to Grade III of the Sri Lanka Teachers Educators Service) 

கல்வி அமைச்சின் கீழுள்ள தேசிய கல்வியியற் கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சி மத்திய நிலையங்களில் உள்ள மேற்படி பதவிக்கான 706 வெற்றிடங்களை மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப்பரீட்சை மூலம் நிரப்புவதற்காக கடந்த 2020 பெப்ரவரி மாதம் 07ம் திகதிய அரச வர்த்தமானியில் விண்ணப்பம் கோரப்பட்டது.

பரீட்சைக்கான பாடத்திட்டம்

1. நுண்ணறிவும் கிரகித்தலும், 02 மணித்தியாலம்

2. விடய ஆய்வு, 02 மணித்தியாலம்,

3. கல்வி மூலத்தத்துவங்கள்,

இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவையின் IIIஆம் தரத்திற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப்பரீட்சை 2019 (2020)

கல்வியமைச்சின் கீழுள்ள தேசிய கல்வியியற் கல்லூரிகள் மற்றும் ஆசிரியர் பயிற்சி மத்திய நிலையங்களில் உள்ள 384 வெற்றிடங்களை திறந்த போட்டிப்பரீட்சை மூலம் நிரப்புவதற்காக விண்ணப்பங்கள் கடந்த 2020 பெப்ரவரி 07ம் திகதிய வர்த்தமானியில் கோரப்பட்டது.

பாடத்திட்டம்

01. பொது அறிவும் - 01 ம்ணித்தியாலம்   நுண்ணறிவும் - 01மணித்தியாலம்
02. கிரகித்தல்  - 02 மணித்தியாலம்
03. விடய ஆய்வு - 01 மணித்தியாலம்

இப்பரீட்சைகள் இவ்வருடத்துக்குள் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.



No comments:

Post a Comment

Pages