பட்டதாரி பயிற்சியாளர்கள் கடமைக்கு சமூகமளிப்பது அத்தியாவசியமல்ல - Today First

Application

PHI Selected Name List

Breaking

Sunday, March 29, 2020

பட்டதாரி பயிற்சியாளர்கள் கடமைக்கு சமூகமளிப்பது அத்தியாவசியமல்ல



பயிற்சிக்காக புதிதாக இணைத்துக்கொள்ளப்படும் பட்டதாரிகளை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயங்களில் மற்றும் பிரதேச செயலகங்களில் இணைத்துக்கொள்வது தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளருக்கு (Department of Government Information) பொது நிர்வாக அமைச்சின் செயலாளரினால் கடிதம் அனுப்பிவைக்கப்படுள்ளது.


இது குறித்து அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:

அரச நிர்வாகம் , உள்நாட்டு அலுவல்கள் மற்றும் மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சு

ஊடக அறிக்கை

2020.03.29

நாலக கலுவேவ அவர்கள்,
பணிப்பாளர் நாயகம்,
அரசாங்க தகவல் திணைக்களம்

தொழில்வாய்ப்பற்ற பட்டதாரி பயிற்சியாளர்கள் கடமைகளுக்காக சுகாதார வைத்திய அதிகாரிகள் அலுவலகத்திற்கு இணைத்துக் கொள்ளல்
தற்போது பிரதேச செயலாளர் அலுவலகங்களில் சேவைக்காக சமூகமளித்துள்ள பதிவுசெய்துள்ள பட்டதாரி பயிற்சியாளர்களில் பயிற்சி நடவடிக்கைகள் ஆரம்பம் தற்போதைய நிலமையை கருத்தில் கொண்டு மே மாதம் வரையில் தாமதபடுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும் சுகாதார மற்றும் சுதேசிய வைத்திய சேவை அமைச்சின் கோரிக்கைக்கு அமைய தற்போதைய நிலையை கட்டுப்படுத்துவதில் இவர்களின் ஒத்துழைப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு பெற்றுக் கொடுக்கக் கூடிய வகையில் இந்த காரியாலயங்களுக்கு தற்காலிகமாக இணைத்துக் கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதினால் இவர்களுக்கு சேவைக்கு சமூகமளிப்பதற்கு சிரமம் என்பதினால் நாளைய (2020.03.30) தினத்தில் சுகாதார வைத்திய அதிகாரி /பிரதேச செயலாளர் அலுவலகத்தில் கடமைக்கு சமூகமளிப்பது அத்தியாவசியமல்ல என்பதுடன் இது தொடர்பில் குறிப்பிட்ட காலத்தில் அறிவிக்கப்படும்

எஸ். ஹெட்டியாராச்சி

செயலாளர்
அரச நிர்வாகம் , உள்நாட்டு அலுவல்கள் மற்றும் மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சு

No comments:

Post a Comment

Pages