ஒருலட்சம் வேலைவாய்ப்புக்களுக்கு தகைமையுடையவர்கள் தெரிவு முறை - Today First

Application

PHI Selected Name List

Breaking

Wednesday, January 15, 2020

ஒருலட்சம் வேலைவாய்ப்புக்களுக்கு தகைமையுடையவர்கள் தெரிவு முறை



நாடு பூராகவும் வழங்கப்படவுள்ள ஒருலட்சம் வேலைவாய்ப்புக்களுக்கு ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவிலும் 300க்கும் 350க்கு இடைப்பட்டவர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்படவுள்ளனர்.


இவர்களில் விகாரைகளின் நாயக தேரர், ஏனைய சமயத் தலைவரொருவர், மாவட்ட செயலாளர்கள், கிராம சேவையாளர் உள்ளிட்ட கள அலுவலர்களின் கண்காணிப்பின் கீழ் தகைமையுடையவர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். தெரிவு முறை சரியாக இடம்பெறுவதை உறுதிசெய்வதற்காக பாதுகாப்பு தரப்பில் திறமையான சிலரையும் ஈடுபடுத்த அரசாங்கத்தால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


இத்தெரிவில் தகைமை பெறுவோர் பாடசாலைகள், வைத்தியசாலைகள் மற்றும் அரசாங்க நிறுவனங்களில் கல்வித் தகைமை தேவைப்படாத தொழில்களுக்காக நியமிக்கப்படுவார்கள் எனவும். தச்சுத் தொழில், விவசாயம், மீன்பிடி, வனப் பாதுகாப்பு போன்ற துறைகளுக்காகவும் அந்தந்த பிரதேசங்களுக்கு அவசியமான வகையில் பயிற்சிகளை வழங்கி சேவையில் ஈடுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும். பாதுகாப்பு அமைச்சு மற்றும் முப்படைகளின் கண்காணிப்பின் கீழ் ஆட்சேர்ப்பு மற்றும் பயிற்றுவிப்பு இடம்பெறுமெனவும் அரசாங்கம் தகவல் வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment

Pages