விண்ணப்ப முடிவுத்திகதிகள் நீடிக்கப்பட்டுள்ள பரீட்சைகள் - Today First

Application

PHI Selected Name List

Breaking

Saturday, June 6, 2020

விண்ணப்ப முடிவுத்திகதிகள் நீடிக்கப்பட்டுள்ள பரீட்சைகள்



விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்த ஒருசில பரீட்சைகளுக்கான விண்ணப்ப முடிவுத்திகதிகள் நீடிக்கப்பட்டுள்ளன.

கடந்த மார்ச் மாதம் வர்த்தமானி மூலம் விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்த பரீட்சைகளுக்கே விண்ணப்பிக்கும் திகதி நீடிக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதத்திலிருந்து நாட்டில் ஏற்பட்டிருந்த அசாதாரண சூழ்நிலைகளின் காரணமாக குறித்த பரீட்சைகளின் விண்ணப்ப முடிவுத்திகதிகள் தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. 

எனினும் தற்பொழுது இவ்வாறு  இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்சேர்ப்பு போட்டிப்பரீட்சைகள் மற்றும் வினைத்திறமைகாண் தடைப்பரீட்சைகள் என்பவற்றின் விண்ணப்ப முடிவுத்திகதிகளை நீடிப்பதாக அறிவிக்கும் வர்த்தமானி அரசாங்க அச்சுத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வாறு விண்ணப்ப முடிவுத்திகதிகள் நீடிக்கப்பட்டுள்ள ஆட்சேர்ப்பு போட்டிப்பரீட்சை மற்றும் வினைத்திறமைகாண் தடைப்பரீட்சை என்பவற்றின் விபரங்கள்:

  1. தொகைமதிப்பு புள்ளிவிபர திணைக்களத்தின் புள்ளிவிபர உத்தியோகத்தர் தரம் IIக்கான முதலாவது வினைத்திறமைகாண் தடைப்பரீட்சை. (First Efficiency Bar Examination for Statistical Officers of Grade III of the Department of Census and Statistics)  இதற்கான விண்ணப்ப முடிவுத்திகதி எதிர்வரும் ஜூன் 30ம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது
  2. தொகைமதிப்பு புள்ளிவிபர திணைக்களத்தின் புள்ளிவிபர உத்தியோகத்தர் தரம் Iக்கான இரண்டாவது வினைத்திறமைகாண் தடைப்பரீட்சை. (Second Efficiency Bar Examination for Statistical Officers of Grade II of the Department of Census and Statistics)  இதற்கான விண்ணப்ப முடிவுத்திகதி எதிர்வரும் ஜூன் 30ம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.
  3. இலங்கை உள்நாட்டு இறைவரிச் சேவையின் தரம் IIIற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப்பரீட்சை (Open Competitive Examination for Recruitment to Grade III of the Sri Lanka Inland Revenue Service) இதற்கான விண்ணப்ப முடிவுத்திகதி எதிர்வரும் ஜூலை மாதம் 03ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Pages