கிராம உத்தியோகத்தர்களுக்கான பரீட்சைகளின் விண்ணப்ப முடிவுத்திகதிகள் - Today First

Application

PHI Selected Name List

Breaking

Friday, June 12, 2020

கிராம உத்தியோகத்தர்களுக்கான பரீட்சைகளின் விண்ணப்ப முடிவுத்திகதிகள்



கிராம உத்தியோகத்தர்கள் சேவை தரம் III, I உத்தியோகத்தர்களுக்கான வினைத்திறமை காண் தடைப்பரீட்சைகளுக்கான விண்ணப்பங்கள்

பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கீழுள்ள கிராம அலுவலர் சேவையின் தரம் III, I அலுவலர்களுக்கான வினைத்திறமைகாண் தடைப்பரீட்சைக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் திகதி நீடிக்கப்பட்டுள்ளது.

இப்பரீட்சைகள் தொடர்பாக கடந்த 2020 மார்ச் மாதம் 06ம் திகதிய வர்த்தமானியில் விண்ணப்பங்கள் கோரப்பட்டது. இவ்விண்ணப்பங்களை 2020 மார்ச் 30ம் திகதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் அதன் பின்னர் நாட்டில் ஏற்பட்டிருந்த அசாதாரண சூழ்நிலைகளின் காரணமாக கிராம சேவை உத்தியோகத்தர்களின் வினைத்திறமைகாண் தடைப்பரீட்சைக்கான விண்ணப்ப முடிவுத்திகதியானது மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டிருந்தது.  

தற்பொழுது இப்பரீட்சைகளுக்கான விண்ணப்ப படிவத்தினை எதிர்வரும் 2020 ஜூன் மாதம் 20ம் திகதி வரை அனுப்பிவைக்கும் வகையில் பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் காலநீடிப்பு வழங்கப்பட்டு அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று (2020.06.12) வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 2020 மார்ச் மாதம் 06ம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானியில் இப்பரீட்சை 2020 மே மாதம் இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தினால் நடாத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் தற்பொழுது வெளியிடப்பட்ட வர்த்தமானியில் இப்பரீட்சை எதிர்வரும் 2020 செப்டெம்பர் மாதம் நடைபெறும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மற்றும் ஏற்கனவே இப்பரீட்சைக்கு விண்ணப்பித்தவர்கள் தர்பொழுது விண்ணப்பிக்கத் தேவையில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Pages